சிற்றின்பம்

அதையே யோசி 
« Back to blog

MCX SIP VOIP Client

SIP VOIP- க்கு அறிமுகம் தேவைப்படுவோர் இங்கே  பார்க்கலாம். Analog telephone adapter போக பயணத்தில் இருக்கும் போது X-lite பயன்படுத்துவது உண்டு. பல VOIP provider -களுடன் வேலை செய்யும் படி அருமையாக எழுதப்பட்ட மென்பொருள் என்றாலும் பயங்கர மெதுவாக வேலை செய்யும். அது போக மெமரி கன்னாபின்னாவென்று வேறு திங்கும்.

அண்மையில் 3CX பற்றி நோண்டிக்கொண்டிருந்தேன். அவர்கள் கொடுக்கும் ஒரு VOIP க்ளையண்ட் அருமையிலும் அருமை. X-lite -ஐ விட ரொம்ப இலகுவானது. பேசும் கால்களில் தேவையற்ற அனாவசிய இறைச்சல்கள் இல்லை. அதை இங்கிருந்து இறக்கிக் கொள்ளவும்.

உங்களுக்கு SIP அக்கவுண்ட் வேண்டுமென்றால் callcentric.com பயன்படுத்தலாம். 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்துகிறேன். அருமையான சர்வீஸ்.

இன்னும் இண்டர்நெட் இணைப்பை வாங்கவில்லை. இங்கே எத்தனை நாள் வேலையென தெரியவில்லை. நாடோடி வாழ்க்கையில் ப்ளானிங் ஜாஸ்தி தேவைப்படுகிறது. இங்கு இருக்கிற வரை அப்பார்ட்மெண்டில் இலவசமாக ஓடிக் கொண்டிருக்கும் Wi-Fi தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஓங்கி காற்றடித்தால் இணைப்பு கிடைக்க மாட்டேங்கிறது. ஒரு Bar சிக்னலில் இணைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் Wi-Fi சிக்னல் கூட்டுவதற்கு ஒரு Wi-Fi Repeater வாங்கப்போகிறேன். அது வந்தால் என்னுடைய Analog telephone adapter-ஐ இணையத்தில் இணைக்கமுடியுமென நினைக்கிறேன். அதுவரை 3CX தான்.

 

 

Comments (0)

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter