சிற்றின்பம்

அதையே யோசி 

♫நினைத்தால் உனை நான்♫-தாயன்பன்

இந்த பாடல் எந்த படத்திலிருந்து...?

  
(download)

Loading mentions Retweet

Comments [0]

♫சிறு பொன்மனி அசையும்♫-கல்லுக்குள் ஈரம்

ஒருகாலத்தில் பலரை கிறங்க வைத்து மறுஜீவன் பெற்ற பாடல்...  சுப்பிரமணியபுரம் வாயிலாக....

அழிவில்லா இந்த இசையை தந்த படைப்பாளி இளையாராஜா.

Siru Poonmani by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [2]

♫யாரோ ஒருத்தி♫-லண்டன்

பாடகர் கார்த்திக்கின் மயக்கும் குரலில் "யாரோ ஒருத்தி என்றவளை யாரும் சொல்ல மாட்டார்கள்" லண்டன் படத்திலிருந்து இசை வித்யாசாகர்.

Yaaro Enro Oru by Vidyasagar,Karthick  
(download)

Loading mentions Retweet

Comments [0]

உணர்வுகள் சிறுகதை - 2

"இந்த போனை பார்க்க பார்க்க எனக்கு ஏக்கமாக இருக்கிறது" என்றாள் என் மனைவி தன் தம்பியிடம். அவர் கையில் அழகாக அடக்கமாக ஒரு மோட்டோ ரேஜர் போன் உட்கார்ந்திருந்தது. தன் ஏக்கத்திற்க்கு காரணம் அந்த செல்பேசி என்னால் உடைக்கப்பட்டு விட்டது என சஸ்பென்ஸை போட்டு உடைத்திருக்கலாம். ஆனால் நீட்டு முழக்கி ரிஷிமூலம் தொட்டு கதை சொல்வதில் என் மனைவி வல்லவள்.

அன்று என் மனைவியின் உறவினர் ஒருவரின் திருமணம். கொண்டாட்டங்கள் முடிய வெகுநேரம் ஆகிவிட்டது. பையன் வேறு தூக்கத்திற்காக அழ ஆரம்பித்தான். நான் மட்டும் அவனைக் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் மாமனார் வீட்டுக்கு புறப்படலானேன். ஏறக்குறைய நடுநிசியை நெருங்கும் நேரம். அன்று போட்டிருந்த நீலக்கலர் பேண்டின் பாக்கெட்டில் எதுவும் வைப்பதில்லை. பாக்கெட் ஆழமாக இல்லாததால் அதில் பைசாவைப் போட்டால் கூட உட்கார்ந்திருக்கும் போது கீழே வந்து விழுந்து விடும்.

வீட்டுக்கு வந்த நெடுநேரம் கழித்து தான் என் செல்பேசியை தேட ஆரம்பித்தேன். எங்கு தேடியும் காணோம். பேண்ட் பாக்கெட்டில் வைத்த ஞாபகம். கட்டாயம் அது ஆட்டோவில் தான் விழுந்திருக்க வேண்டும். இந்த நாட்களில் செல்பேசி இல்லையெனில் உங்கள் கை உடைந்த மாதிரி உணர்ந்திருக்கிறீர்களா? அதுவும் செல்பேசி தொலைந்துப் போனால்? ஒன்றுமே செய்யத் தோனாது.

என்னுடைய எண்ணுக்கு மறுபடியும் மறுபடியும் வேறொரு போனிலிருந்து அழைப்பு விடுக்கிறேன். யாரும் எடுக்க காணோம். கடவுளே! யாராவது போனுக்கு பதில் அளித்தால் நன்றாகயிருக்கும். அவன் காலில் விழுந்தாவது அந்த போனை வாங்கி விடவேண்டும். அதற்குள் எல்லாருக்கும் நான் ஃபோனை விட்ட விசயம் தெரிந்திருந்தது. ஆளாளுக்கு இலவச அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஏறக்குறைய 100 அழைப்புகளுக்கு அப்புறம் அந்த ஆட்டோ டிரைவர் தான் எடுத்தானென நினைக்கிறேன்.

"சார் யாரோ ஒரு அம்மா கூப்பிட்டாங்க அவங்க அரசரடி ஸ்டாண்டுக்கு வந்து வாங்கிட்டுப் போறதா சொல்லீட்டாங்களே சார்"

சட்டென புரிந்தது என் மனைவியின் அழைப்புக்கு கடைசியில் செல்பேசியை எடுத்திருக்கிறான்.


"இல்லேம்மா! போனை பார்த்தா காஸ்ட்லியா ஃபோனா இருக்கும் போல 1000 ரூபாய் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்க"

"இல்லே சார் இது பழைய ஃபோன் தான் வாங்கி ஒன்றை வருசமாச்சி. தெரியாம தானே அவரு போனை விட்டுட்டு போயிருக்காரு. நீங்க காசு கேட்ட் என்ன நியாயம்.

"என்ன பேசுற நீ. இந்த போனை நான் அப்படியே அமுக்கியிருந்தா என்ன செஞ்சிருப்பே நீ. நியாயமான முறையில போலாமுன்னு தான் கேட்கிறேன்"

"1000 ரூபாயெல்லாம் கொடுக்க முடியாதுங்க. அநியாயமா இல்லே"

"சரி 500 ரூபாயவது கொடுங்க"

500 போனாலும் பராவயில்லை என ஆட்டோகாரனின் நேர்மையை 50 ரூபாய் கொடுத்து வாங்கி  விட்டு போனுடன் என் மனைவி வீட்டுக்கு வந்தார்.

சென்னையில் இருக்கும் போது எனக்கு என் மனைவிக்கும் வாடகை வீடு தேடுவது விசயமாக வாக்குவாதம் முற்றியது. வாக்குவாதத்தில் எப்போதுமே நான் வெல்வது கிடையாது. மீசையில் மண் ஒட்டாமல் இருக்க அவளை விட உரத்த குரலில் பேசுவது, பக்கத்தில் இருக்கும் பொருட்களை போட்டு பந்தாடுவது, கையில் கிடைத்தது போட்டு உடைப்பது என்று என் ஆண்மையை நிரூபித்துக்கொள்ளும் தருணங்களை தான் நாடுவேன். அன்று என் கையில் கிடைத்தது ஆட்டோக்காரனிடமிருந்து தப்பி வந்த என் செல்பேசி. வந்த கோபத்தில் கையிலிருந்த செல்பேசி சிதறு தேங்காய் அடித்தேன். இரண்டு துண்டாக உடைந்தது. என் பையன் ஓடிப்போய் உடைந்த பாகத்தை கையில் எடுத்துப் பார்த்தான். விவாதம் இனிதே முடிவுற்றது. இழப்பு?





Loading mentions Retweet

Comments [0]

♫நீலக்குயிலே♫-மகுடி (இளையராஜா)

மனதை மயக்கும் இசையூணூடே வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.. இன்றைய நாள் இனிதே செல்லட்டும்.


Neela Kuyilae by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

உணர்வுகள் சிறுகதை - 1

"உணர்வுகள் சிறுகதை - 1"

Disclaimer: இந்த கதையில் Porno உரையாடல்கள் கொஞ்சம் தூக்கலாக உண்டு. படிக்க விரும்பாதவர்கள் மேலே தொடர வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு யுவனும் யுவதியும் தொலைப்பேசியில் பேசிக் கொள்கிறார்கள். உரையாடல் திடீரென்று ஓரிடத்திலிருந்து தொடங்குகிறது. இந்த அந்தரங்க உரையாடலை கேட்டதற்கு மன்னிக்கவும். நான் "இந்தியாவின் பாலியல் போக்கின் பரிணாம வளர்ச்சி"யைப் பற்றிய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறேன். இப்படி தான் பலருடைய அந்தரங்களை எட்டிப்பார்க்கும் கட்டாயத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ளேன். என் ஆராய்ச்சி போக்கின் விளைவாக பல தூக்கமில்லா இரவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். சென்று கொண்டிருப்பவையெல்லாம் நல்லவற்றுக்காக என்று வாதிட வரவில்லை. உரையாடலை கேட்போம். அப்படியே என் ஆராய்ச்சி கட்டுரையும் வரும். நீங்களே தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

"நீ எப்படா செய்யப் போறே?" ஒரு முனையில் அந்தப் பெண்.

"என்னம்மா செய்றது நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது. நீ இப்ப என்ன செஞ்சிட்டு இருக்கே" மறுமுனையில் ஒரு ஆண் குரல்.

"ம்ம்ம்... பிசஞ்சிட்டு இருக்கேன்"

"வீட்டுல யாரும் இல்லையா? யாராவது பார்த்துறப் போறாங்கடி"

"இல்ல வீட்டை பூட்டிட்டு போர்வைக்கடியில தான் இருக்கேன்" "அம்மா வெளியில போயிருக்காங்க. ஆமா நீ எத்தனை பேர் கிட்ட போயிருக்கே..."

"ஏன் கேட்குறே"

"சும்மா தெரிஞ்சிக்கலாமுன்னு தான்"

"ஒரு 5 பேர்கிட்ட" "தாத்தா இல்லையாடி"

"தாத்தா நேத்தே ஊருக்கு போயிட்டாரு. 5 பேரா? என்னோட லாஸ்டா வச்சிக்கோ, வேற யாருக்கிட்டேயும் போகாதே, எப்படா வச்சிக்கலாம்"

"என்ன செய்றதுடி வாய்ப்பு வருது பயன் படுத்துக்கிறேன். எனக்கு நேரம் தான் கிடைக்கல. ஏடீ... இதே நெனப்புல கைய அங்கேயே வச்சிக்கிட்டே இருக்காதே நீ ஒழுங்கா படிக்கிற வழிய பாரு. நாம வேலைய முடிச்சதும் எல்லாத்தையும் மறந்திரு."

"மறந்துடுறேன். ஆனா என்ன கல்யாணம் செஞ்சிட்டு அவரோட பண்ணும் போது உன்னோட ஞாபகம் கட்டாயம் வரம்டா."

"கல்யாணம் ஆன பிறகு இதை புருசன் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காதே. முக்கியமா எல்லாம் தெரிஞ்ச மாதிரி காண்பிச்சிக்காதே. ஒன்னும் தெரியாத மாதிரி தான் இருக்கனும் என்ன?"

"ம்ம்..."

(கொஞ்ச நேரம் நிசப்தம்)

"அடிப்பாவி எவ்ளோ பேசுறே. சின்னபுள்ளன்னு நெனச்சேன்"

"ம்ம்ம்ம்... எனக்கு பதினெட்டு வயசாச்சி தெரியுமா தெரியாதா?"

"தெரியும்... காலேஜுல ஒன்னும் தெரியாத மாதிரி எல்லார்கிட்டேயும் பேசிட்டு இருப்பியா? அதுனால தான் இதெல்லாம் கேட்ட எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது"

"ஆமாண்ட அன்னிக்கு நீ அதை சொன்னதிலிருந்து எனக்கு இங்கே இருப்பு கொள்ளலடா, எங்கே வச்சிக்கலாம்டா?"

"ஞாயிற்றுக்கிழமை வான்னா நீ வர மாட்டே. என்ன செய்ய எனக்கு அன்னிக்கு மட்டும் தான் நேரமிருக்கு. அப்படியே சண்டே கேராளாவுக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வரலாமா?"

"என்னடா இது போன்ல "கொய்ஞ் கொய்ஞ்ன்னு சத்தம் வருது..... சண்டே வரமுடியாதுட அம்மா வீட்டுல இருப்பாங்க, செக்ண்ட் இயர் வந்த உடனே வேண போகலாமா?"

"செகண்ட் இயர்க்கு எவ்ளோ நாள் இருக்கு ரெண்டு மாசம் இருக்கா? படம் பார்ப்பியா?"

"பாக்கலாமே... "

"அப்போ நான் போட்டோ பிடிக்கவா?"

"போட்டாவா எதுக்கு?"

"சும்மா உன்கிட்ட காண்பிக்கத் தான்..."

"எனக்கு பயமா இருக்கு... எங்கேயும் போக வேண்டாம். இப்படியே போன்லேயே பேசுகிடலாம்" "என்னடா இது போன்ல ஒரே பீப் பீப்பா கேட்குது. இரு என் போனை பார்க்கிறேன்"

"தெரியலையே... என்னோட செட்லேயும் ஒன்னும் பிரச்சனை இல்லையே... இரு நானும் பார்க்கிறேன்"

அவன் பத்திரமாக செல்ஃபோனில் பதிந்து கொண்டிருந்த உரையாடலை நிறுத்தினான்.

எப்படி அந்த உரையாடல் என்னிடம் வந்தது என்று பார்க்கிறீர்களா? நான் என்னுடைய பல்கலைகழக்த்துக்காக ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் சார். இண்டர்நெட்டில் தான் சார் எனக்கு தேவையான விசயத்தை தேடிக் கொள்வேன். என்னை நம்புங்க ப்ளீஸ்.

Loading mentions Retweet

Comments [2]

♫அவள் அப்படித் தான்♫-இரு பாடல்கள்


....
ஆண் செய்த சட்டம் அவன் போட்ட வட்டம்
அதெற்கென்று பெண் இனமோ
இது யார் சாபம்
நியாங்களோ பொதுவானது
புரியாமல் போனது
........

இளைய கமல்ஹாசனின் குரல் அருமையான பாடல்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - என்றும் என் மனதில் ஒலிக்கும் பாடல்.

Panneer Pushpangkazhe Ghaan by Illayaraja  
(download)

Uravugal Thodar Kathai Unarvu by Illayaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

♫இரவிவர்மன் எழுதாத♫-சந்திரபோஸ்

இந்த பாட்டு எந்த படம்?

பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், சித்ரா

  
(download)

Loading mentions Retweet

Comments [1]

எழுத்தை மறுக்கிறது மூளை

நான் பதிவுகள் என்றெழுதி ஏறக்குறைய 1.5 வருடமாகி விட்டது. என் எழுத்ததால் யாருக்கும் எந்த இழப்போ இலாபமோ இல்லையென்றாலும் என் திருப்திக்காக என் வாழ்க்கையை அங்காங்கே பொய்யும் முரணுமாக சுவாரஸ்யமுடன் எழுத முயற்சித்தேன். முன்பு நிறைய ஆர்வமிருந்தது. துளியூண்டு நகைச்சுவையாவது வரும். கொஞ்ச நாள் முன்பு எதையாவது எழுதலாமென ஆர்வத்துடன் உட்கார்ந்தால் முன்னிருந்த சுதியில்லை. வார்த்தைகள் வர மறுக்கிறது. சொல்லப்போனால் இந்த 1.5 வருட காலத்தில் இலக்கிய படிப்பு வாசம் என்பது சுத்தமாக நின்று விட்டது. எந்த தமிழ் புத்தகத்தையும் திறந்துப் பார்த்ததாய் ஞாபகமில்லை, ஒரு சில வலைப்பக்கங்களை தவிர.

ஊர் மாற்றம், வேலை மாற்றம் என்று மாற்றங்கள் போக நிறைய பொறுப்புகளும் கூடி விட்டது. நாளாக நாளாக எதை பெறுகிறோமோ அதை விட இழப்புகள் அதிகமாகிவிட்டதாக உணர்கிறேன். கொஞ்சம் மனவிட்டு சிரிக்கவோ, நகைச்சுவையாக எதையாவது சொல்லுவதோ என்றிருந்தது எல்லாம் சுத்தமாக கைவிட்டுப் போய் விட்ட மாதிரியிருக்கிறது. பலவற்றை செய்தாலும் ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் மனநிலை.. ஸ்டீரியோ டைப் இரயிலை கொஞ்சம் தடம்புரள வைக்க கூட மனமில்லாமல் மனம்.

கொஞ்சம் நேரம் கிடைத்து ஆர்வத்தை வலிய வரவைத்துக் கொண்டு என்னுடைய வலைப்பதிவுக்கு போனால் ஏதோ யூனிகோட் வேர்ட் பிரஸ் பிரச்சனையால் எழுதியவை எல்லாம் பணால். வந்ததை சேர்த்து வைக்க போஸ்டீரியஸை நாடியிருக்கிறேன்.

ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கதை சொல்லலாமென முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதை பார்த்தால் இனிமேலும் எனக்கு எழுத்து வராதென தோன்றுகிறது. கதை சம்பவமாக தொனித்து நிற்கிறது. அவ்வளவாய் சுவாரஸ்யமில்லை. இருந்தாலும் எழுதி பழகவேண்டுமே...

Loading mentions Retweet

Comments [13]

யார் இந்த சாம் ஆண்டர்சன்?

யாருய்யா இந்த சாம் ஆண்டர்சன்? கொஞ்சம் விளக்கமா யாராச்சும் சொல்லுங்களேன்.


Loading mentions Retweet

Comments [0]