சிற்றின்பம்

அதையே யோசி 

கக்கூஸ்ல ஏஸி

சீனியர் வளையாபதி சொன்னாரு "மவனே! மவனே! இங்கே ஒரே புழுக்கமா இருக்குடா. வீட்டுகுள்ளாறயே இருக்க முடியலே"ன்னார். அதுக்கு நான் சொன்னேன் "நய்னா! நய்னா! இங்கெ அமெரிக்கால கக்கூஸ்ல கூட ஏஸி உண்டு நய்னா"ன்னேன். "கொடுத்து வச்ச மவராசண்டா நீ"ன்னாரு.

சீனியர் வளையாபதி நாலு பேருக் கிட்ட சொல்லியிருக்காரு "என் மவன் கக்கூஸ்ல கூட ஏஸியிருக்கு. என் மவன் கொல்லைக்கு போனுன்னா கூட ஜில்லுன்னு தான் போவான். என் மவன் ரொம்ப நல்லவவவவன்னு" சொல்லியிருக்காரு.

நாலு பேரு என்னை நல்லவன்னு சொன்ன ஆட்டோமெடிக்கா என் கண்ணுல இருந்து பொல பொலன்னு தண்ணி வந்திருந்து.

Loading mentions Retweet

Comments [8]

♫அந்தரங்கம் யாவுமே♫-ஆயிரம் நிலவே வா

"அந்தரங்க யாவுமே... எப்டி எப்டி.... கேட்பதும் பாவமே... எப்டி,.. எப்டி...."

"தேவதை இளம் தேவி என்னை சுத்தும் ஆவி"

உட்பட "ஆயிரம் நிலவே வா'  இருந்து மூன்று பாடல்கள்....

Antharangam by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

தும்ஃஹார ஜிந்தகி தும்ஃஹார ஹாத் மேவ்

இந்த வளையாபதிக்கு தங்கமணிகிட்ட நல்ல பேரே கிடையாது. அண்ணண் ஃபேமிலி கூட ஒரு மாசம் இருந்துட்டு வார்றேன்னு கிளம்பினார் தங்கமணி. தங்கமணி வர்றதுகுள்ள நல்லது நாலு பண்ணி அசத்தனும்னு வளையபாதி லிஸ்ட் போட்டார்.

1. இருக்கிற இடத்தை குப்பையா வச்சிக்காமா சுத்தமா வச்சிக்கனும்.
2. டெய்லி 2 கிலோமீட்டர் நடந்தும் ஜிம்முக்கு போயும் தொந்தியை கரைக்கனும்.
3. கேரியர் இம்ப்ரூவ்மெண்டுக்கு ஒரு சர்டிபிகேஷன் படிச்சி வாங்கனும்.

இந்த லிஸ்ட்ல நாலவது தான் வளையாபதிக்கு எப்படி நிறைவேத்துவதுன்னு ஒரே குழப்பம்.

"இதோ பாருங்க!! நான் வீட்டுல இல்லேன்னு ஜட்டிக் கூட போடாம அம்மணமா நடுவீட்டுல அலையாதீங்க" - தங்கமணி.

தும்ஃஹார ஜிந்தகி தும்ஃஹார ஹாத் மேவ் வளையாபதி கமாண்...

Loading mentions Retweet

Comments [0]

♫சிட்டுக்குருவி♫-இரு பாடல்கள்

சிட்டுக்குருவி படத்திலிருந்து இரு முத்துக்கள்

En Kanmani Un Kaathali by Ilaiyaraja  
(download)

Oru Naal Unnodu Oru Naal by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

♫உருகினேன் கண்மணி♫-அண்ணே அண்ணே

♫உருகினேன் கண்மணி♫

படம்: அண்ணே அண்ணே

பாடியவர்கள்: எஸ்.பி.பி, ஜானகி

இசை: இளையராஜா

Uruginen Uruginen by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

மச்சான்! போன்சாய் வளர்க்கும் கதைய கேளேன்-1

மச்சி நீ கேளேன்! நான் எப்பவாச்சி Barnes&Nobel போயி புக்கை பார்ப்பேன். வாங்குறதில்ல. போன்சாயி போன்சாயின்னு ஒன்ன பார்த்தேன். என்னங்கடா விதையெல்லாம் புக்கு கடையில விக்கிறனுவோன்னு கையில எடுத்து பார்த்த ஒன்னு வாங்குன இன்னொன்னு ப்ரீன்னனுவோ. நமக்கு தான் போன்சாயி வளர்க்குனுமுன்னு ரொம்ப ஆசையிச்சே.

zen ball-உ zen ball-ன்னு இன்னொன்னு. நம்ம கிட்ட இருக்கிற ball மாதிரி இன்னாடன்னு எடுத்துப்பார்த்தா அதை வச்சி மெடிடேஷன் பண்ணலாமுன்னு போட்டிருக்குது. 6 டாலர் கொடுத்து போன்சாய் வாங்குனா இன்னொரு 6 டாலர் ஜென் பாலு ப்ரீயாம்.

மச்சான் கமெடிய கேளேன்! போன்சாய் வளர்க்கலாமுன்னு ஆசையா பாக்கெட்ட விரிச்சா விதைய 24 மணி நேரம் தண்ணியில ஊர வச்சி நாப்கின் பேப்பர்ல போட்டு சீல்டு ப்ளஸ்டிக் கவர்ல போட்டு ப்ரிஜ்ல 7 நாளு வச்சிருக்க சொல்லுதனுவோ.

அந்த 7 நாளு என்னட செய்றதின்னு கேட்ட ஒன்னு ஜென் ball-ஐ கையில வச்சி உருட்டு இல்லேன்னா உன் ball-ஐ உருட்டுங்கிறனுவோ. 7 நாளு கழிச்சி விதை என்ன ஆச்சின்னு சொல்றேன் மச்சான்.

Loading mentions Retweet

Comments [0]

கரண்டும் கல்யாணமும்

இன்னபா பவுரு பொறதில இப்டியொரு கொழப்பமா? நல்லவேளை பர்ஸ்ட் நைட்டு ரூமுகுள்ள பொண்ணை கொண்டாந்து விடும் போது கரண்டு போல....

http://thatstamil.oneindia.in/news/2008/09/06/tn-power-cut-at-mass-wedding-causes-mix-up-of-brides.html

"தேனி: தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் தேனி மாவட்டத்தில் யார் பெண் என்று தெரியாமல் இரண்டு மாப்பிள்ளைகள் மாற்றி தாலி கட்டிய விநோதம் நடந்துள்ளது. காரணம் - மின் தடை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.

இங்கு 40 ஜோடிளுக்கு இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகளால் அந்தக் கோவில் வளாகம் முழுவதும் உறவினர்கள், குடும்பத்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அனைவரும் முகூர்த்த நேரத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். எல்லாம் ரெடியானது, முகூர்த்த நேரமும் வந்தது. மாப்பிள்ளைகள் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்பட மங்கள மேளம் முழங்க மாப்பிள்ளைகள் தாலி கட்ட தயாராயினர். அப்போது திடீரென மின்சாரம் போனது.

இதனால் கல்யாணம் நடந்த இடத்தில் பெரும் குழப்பமானது. இந்த களேபரத்தில் வீராசாமி, பாலமுருகன் ஆகிய இரு மாப்பிள்ளைகள் தவறுதலாக வேறு பெண்களுக்குத் தாலி கட்டி விட்டனர்.

வீராசாமி தாலி கட்ட வேண்டிய பெண் சுப்புலட்சுமி. ஆனால் அவரோ சுப்புலட்சுமிக்கு பக்கத்தில் நின்றிருந்த அவரது தோழிக்கு தாலி கட்டி விட்டார்.

அதேபோல பாலமுருகன், சிவகாமி என்பவருக்குப் பதில் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார்.

இதனால் அங்கு பெரும் குழப்பமாகி விட்டது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட பெரியவர்கள் கூடி பேசி பரிகார பூஜை ஒன்றை செய்ய தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து கட்டிய தாலிகளை கழற்றச் சொல்லி அவற்றுக்கு பரிகார பூஜை செய்தனர். பின்னர் உரிய மணமகள்களின் கழுத்தில் நல்ல விளக்கொளியில் மாப்பிள்ளைகள் தாலி கட்ட கல்யாணம் இனிதே முடிந்தது."

Loading mentions Retweet

Comments [0]

கையில காசு வாயில தோசை

ஏண்டே! இது உனக்கே நல்லாயிருக்காடே. அரிசி 20 பவுண்டு $25 டாலருக்கும் மேல தாண்டே. நான் தோசை திங்க ஆசைப்பட்டதும் உண்மைதாண்டே. அதுக்காக இந்த டப்பாலயிருக்கிற இட்லி மாவை 4 டாலர் ரேட்டு சொன்ன எப்படிடே. ஏ.. எண்ணி 6 கல் தோசை தாண்டே வந்திச்சி.... ஆப்பயில ஒட்டியிருக்கிற கொஞ்சம் மாவையும் விடலேடே... நக்கிட்டோம்டே. டப்பா நல்லாயிருக்குடே. ஒங்கடையில கேஷ் கவுண்டருல ஒரு ஆண்ட்டி இருக்கவுல. அவையளும் நல்ல இருக்காகடே


Loading mentions Retweet

Comments [1]

♫மாலை நிலா♫-கண்களும் கவிப்பாடுதே


Maalai Nila by Ilaiyaraaja & Manjari  
(download)

Loading mentions Retweet

Comments [0]

Night Train - Thomas Train Engin Song

என்னுடைய பையனின் விருப்பப் பாடல். 1000 முறை திரும்ப திரும்ப இந்த பாடலை போட்டாலும் கேட்பாம். அடிக்கடி முனுமுனுக்கு பாடலும் கூட


Loading mentions Retweet

Comments [0]