சிற்றின்பம்

அதையே யோசி 

MCX SIP VOIP Client

SIP VOIP- க்கு அறிமுகம் தேவைப்படுவோர் இங்கே  பார்க்கலாம். Analog telephone adapter போக பயணத்தில் இருக்கும் போது X-lite பயன்படுத்துவது உண்டு. பல VOIP provider -களுடன் வேலை செய்யும் படி அருமையாக எழுதப்பட்ட மென்பொருள் என்றாலும் பயங்கர மெதுவாக வேலை செய்யும். அது போக மெமரி கன்னாபின்னாவென்று வேறு திங்கும்.

அண்மையில் 3CX பற்றி நோண்டிக்கொண்டிருந்தேன். அவர்கள் கொடுக்கும் ஒரு VOIP க்ளையண்ட் அருமையிலும் அருமை. X-lite -ஐ விட ரொம்ப இலகுவானது. பேசும் கால்களில் தேவையற்ற அனாவசிய இறைச்சல்கள் இல்லை. அதை இங்கிருந்து இறக்கிக் கொள்ளவும்.

உங்களுக்கு SIP அக்கவுண்ட் வேண்டுமென்றால் callcentric.com பயன்படுத்தலாம். 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்துகிறேன். அருமையான சர்வீஸ்.

இன்னும் இண்டர்நெட் இணைப்பை வாங்கவில்லை. இங்கே எத்தனை நாள் வேலையென தெரியவில்லை. நாடோடி வாழ்க்கையில் ப்ளானிங் ஜாஸ்தி தேவைப்படுகிறது. இங்கு இருக்கிற வரை அப்பார்ட்மெண்டில் இலவசமாக ஓடிக் கொண்டிருக்கும் Wi-Fi தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஓங்கி காற்றடித்தால் இணைப்பு கிடைக்க மாட்டேங்கிறது. ஒரு Bar சிக்னலில் இணைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் Wi-Fi சிக்னல் கூட்டுவதற்கு ஒரு Wi-Fi Repeater வாங்கப்போகிறேன். அது வந்தால் என்னுடைய Analog telephone adapter-ஐ இணையத்தில் இணைக்கமுடியுமென நினைக்கிறேன். அதுவரை 3CX தான்.

 

 

Loading mentions Retweet

Comments [0]

♫புல்லைக் கூட பாடவைத்த புல்லாங்குழல்♫

பாடகர் ஜெயசந்திரனின் சிறப்பு பாடல்கள் இரண்டு....

♫புல்லைக்கூட பாட வைத்த புல்லாங்குழல்♫ - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

♫பூவிலே மேடை நான் போடவா♫ - பகல் நிலவு

  
(download)

  
(download)

Loading mentions Retweet

Comments [0]

♫ஏதோ நினைவுகள்♫-அகல் விளக்கு

♫ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏதோ?♫
-ஜேசுதாஸ், ஜென்சி (இளையராஜா)

Etho Ninaivugal by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

December 12 2012 -ல உலகம் அழியப்போகுதா?

December 12 2012 -ல உலகம் அழியப்போகுதா? எவனுக்கு தெரியும். உலகம் அழியிறதா இருந்தா முன்னாடியே சொல்லுங்கப்பா முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு போயிரலாம் ;-)

Part 1



Part 2



Part 3



Part 4



Part 5



Loading mentions Retweet

Comments [0]

♫அன்பே சங்கீதா♫-இளையராஜா

♫சின்னப்புறா ஒன்று....♫ - எஸ்.பி.பி - இளையராஜா

♫கீதா சங்கீதா...♫ - இளையராஜா

இரண்டு பாடல்களையும் இரசிக்க...

Geetha Sangeetha by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

உணர்வுகள் சிறுகதை - 3

"கேட்டியா அன்னிக்கி get togetherருன்னு 4 ஃபேமிலி வீட்டுக்கு வந்திருந்திச்சிவே. வந்தவங்களையெல்லாம் வீட்டை விட்டு வெளிய போன்னு என் பையன் சொன்னான். இதை கேட்ட எப்படியிருக்கும்வே ஒனக்கு"

"அவனுக்கு மூன்றை வயசு தான் ஆவுது. எ.. அவனை சொல்லி தப்பில்லவே. எப்பவுமே நாலு செவுத்துக்குள்ள அவன் அம்மே கூடவே இருக்கம்ல அதாண்டே. வாரக்கடைசின்னா பார்க்கு மாலுன்னு கூட்டுப்போவோம். அப்பறம் நாங்க வாரத்துக்கு ஒரு வீட்டுக்கு போய் திம்போம்ல. அவங்க நாலு பேரும் ஒரு வாரக்கடசி எங்க வீட்டுக்கு வந்து தின்பவுல. மொத்தமே வெளியுலக அவனுக்கு அவ்வளவுதாம்லே"

"எ... புள்ள இப்படியே தனியாவே யார் கூடவும் ஒண்டாம வளர்றம்ல அதுனால  யாரையும் அண்ட விடமாட்டாங்கிறாம்ல.இப்பிடியிருந்தா ஊருக்கு போய் அமெரிக்கல வளர்ற புள்ளன்னு சொல்லிக்கிட முடியுமா?"

"அன்னிக்கு வந்த ஃபேமிலில ஒரு சின்ன பொண்ணுடே. அவ அம்மே சொல்லிட்டான்னு பில்லா ஸ்டைல் பண்ணுதுடே. சிவாஜி பாட்டு பாடுடே. என் புள்ள இருக்கன்ல ரூம்லே போய் தனியா உட்கார்ந்திட்டாம்வே. வெள்ளக்கார புள்ள எல்லாம் என்னா ஆட்டம் ஆடுதுடே. கேட்டா.. அவங்க ஆத்தா அம்மா புள்ளய 5 அல்லது 6 மாசத்துல Daycare -ல உட்டுட்டு வேலைக்கு போயிரும்டே. புள்ள அப்பன் ஆத்தாவை விட்டு வெளியே தாண்டே ஜாஸ்தி வளருது. நாம அப்படியா? புள்ளய நாலு சொவுத்துக்குள்ள பொத்தி பொத்தி வளக்குறோம்ல"

"எல்லாத்தையும் வீட்டை விட்டுப்போக சொல்லு வீட்டை விட்டுப்போக சொல்லுன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாம்லே.எ... கேட்டியா... புள்ளைய நான் அடிக்கிறது கிடையாது. அவன் அம்மே கண்டிச்சா நான் கண்டிக்க கூடாது. நான் கண்டிச்சாஅவன் அம்மே கண்டிக்க கூடாது. இது எனக்கு எம் பொண்டாட்டிக்கும் உள்ள அக்ரிமெண்டுடே."

"ரூமுக்குள்ள போயி தூங்க வைக்கிறென்னு என் பொண்டாட்டி தூக்கிட்டு போன அவன. அவன் அப்பாவையும் வரச்சொல்லுன்னு சொல்லியிருக்கான். எல்லாத்துக்கு முன்னாடி குடும்பமே ரூமுக்குள்ள போயி பூட்டிக்கிட்டா நல்லாவா இருக்கும்"

"இருந்தாலும் உள்ள போனேம்ல. சும்மா நாச்சிக்கும் அழுதுக்கிட்டே இருக்கான். அவன் அம்மே புள்ளைக்கு பசிக்குதோன்னு சோறு கொண்டாறேன்னு போச்சிலே. திரும்ப திரும்ப ஓங்கி ஓங்கி அழுதாம்லே. எனக்கு கோவம் வந்திருச்சிவே. அவனை பிடிச்சி குண்டியில ரெண்டு அறை வுட்டேன். என்னடா! அப்பன் காரன் தீடீர்ன்னு அடிக்கான்னு அழுகைய நிப்பாட்டிட்டு என்னையே பார்த்தான். நானும் அவனையே பார்த்துட்டு இருந்தேனா திரும்ப அழுக ஆரம்பிச்சிட்டான்வே"

"அவன் அம்மே சோத்த கொண்டு ரூமுக்குள்ளாற வந்திச்சா ஓடிப்போயி அவன் அம்மய பிடிச்சிக்கிட்டு அப்பா அடிக்காருன்னு சொன்னான்வே. என் பொண்டாட்டி எம் மூஞ்சே பார்த்தா.. நான் உண்மைய சொன்ன புள்ளய அடிக்காதீங்கன்னு திட்டுவா... எனக்கு வேற பயமா இருந்திச்சி. நான் அவனை கடவுள் சத்தியமா அடிக்கவேயில்லன்னு சொல்லிட்டேம்ல"

"பொண்டாட்டிக்கு வந்திச்சே கோபம்.பையன பிடிச்சி பொய்யா சொல்றே பொய்யா சொல்றேன்னு திரும்ப அவன் குண்டியில நாலு சாத்து சாத்துனா. பையன் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான். எனக்கு ஒரு மாதிரி போயிடிச்சி தெரியுமாலே. எதுக்குடா என்னையறியாம இந்த பொய் வந்திச்சோன்னு ஆகிப்போச்சிடே"

"தேம்பி தேம்பி அழுதுக்கிட்டே அவன் தூங்கிட்டான். எனக்கு தாம்ல துக்கம் வரல. சே! என்னயிருந்தாலும் அவன் பச்ச மண்ணுவே..."

Loading mentions Retweet

Comments [0]

கோடம்பாக்க எழ்ச்சி கவ்ஞருங்கோ

"இன்னடா இது கவ்ஞரு 'ஐ-ண-அடிக்ட்டு'க்கு அப்புறம் டைமண்டுபெல் எழ்ச்சி கவிஞர் ஆஸ்தான போஸ்ட்ல அப்பப்ப எழ்ச்சி கொடுத்தாரேன்னு நெந்சிட்டு இருந்தா பா.விஜயி ஒவ்வொரு பூக்களுமேன்னு ஒரு ஹிட்டு கொடுத்தாருங்கோ. ஒவ்வொரு பூக்களுமே கேட்டு எழ்ச்சி வந்திச்சோ இல்லேயோ லவ்வு பெய்லியர் அனவ்யன் எல்லாம் புட்ச்சு புட்சா கல்யாணம் பண்ணிகிணங்கோ"

"கக்கத்துல செண்ட்டு இருக்கு இடுப்புல சாராயம் இருக்கு புட்டத்துல பால் இருக்குன்னு" ஹீரோயினுக்கு பாட்டெழுதுன கவ்ஞருங்க என்னாடன்னா "காக்கா காசு தூக்கினு வந்த கடவுளு லெக் பீசு தூக்கின்னு வந்த காக்கா ஒரு கஸ்மாலம்"ன்னு எழ்ச்சி பாட்டா எழுதிட்டு இருக்கானுவோ. எழ்ச்சி வந்தாலும் வந்திச்சி கவ்ஞருக்கெல்லாம் எழ்ச்சி வர மெய்யாலுமே கேக்கிற நம்மலுக்கும் எழ்ச்சி புட்டுக்கின்னு வருதுங்கோ.

க்ளைமேக்ஸா "பொய் சொல்ல போறமுல" 4 பாட்டு எழ்ச்சி பாட்டு ரேஞ்சுக்கு வச்சா... கவ்ஞருங்கோ எழுதுற பாட்டுல நாம ஹிரோயின் கக்கத்து செண்டை எப்ப மோந்து பார்க்கிறதுங்கோ. மொதல்ல பா.விஜயி பேனாவை பிடுங்கி ஒழ்ச்சி வைக்கனுங்கோ. கோடம்பாக்க கவ்ஞருங்கோ கெட்டுப் போறதே பா.விஜயி பாட்டெழுதுறதுதானுங்கோ...

Loading mentions Retweet

Comments [0]

♫பொய் சொல்லப் போறோம்♫-பாடல்கள்

"பொய் சொல்லப் போறோம்" - இன்னபா மானாவாரியா தத்துவப் பாடல்கள் நிறைய இருக்கு. இருந்தாலும் ரெண்டு பாட்டு தூக்கிட்டு மீதி இங்கே...

Oru Varthai - Www. Tamilfast. Com by Shreya Ghoshal - Www. Tamilfast  
(download)

Loading mentions Retweet

Comments [0]

A சிறுகதை - “குண்டலினி”

வாழ்க்கையே வெறுத்துப் போன ஒருத்தன் வாழும் கலையை அறிந்துக் கொள்ள ஒரு சாமியார் கிட்ட போனானாம். அது ஒரு தியான கூட்டம். காவி அங்கியில் கருந்தாடி புரள சாந்தமே சொரூபியாக அங்கே சாமியார் உட்கார்ந்திருந்தார். நம்மாளும் வாழும் கலையை அறிந்துக் கொள்ள சாமியார் முன்னாடி முன் வரிசையில் உட்கார்ந்திருந்தானாம். சாமியார் குண்டலினி யோகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். எல்லோருடைய முகத்திலும் திவ்ய அமைதி குடிக் கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தனர்.

"ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைக்கு உடம்பிலுள்ள சுக்கிலம் தான் காரணம். சுக்கிலத்தை மேலேற்றி கபாலத்தில் இருத்தினால் கடவுளை காணலாம். முக்தி கிட்டும்" என்ற சாமியாரின் வார்த்தை தேவக்குரலாக அமைதியின் அமைதியாக ஒலித்தது. "ஓம் என்பது பிரணவ மந்திரம். ஓம்ம்ம்ம்ம்ம்ம் என்ற ஒலியை நெற்றியில் குவித்து நாம் எல்லோரும் தியானிப்போம்"

"ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்................................................................." - ம் இன்னும் அடங்கவில்லை.

"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............. என் குஞ்சை யாருடா அமுக்குனது"  ஓங்கார ஒலிக்கிடையே  வாழ்க்கையை வெறுத்தவன் ஓங்கிக் கத்தினான்.

அவன் பின்னாலிருந்து ஒரு குரல் "முன்னாடி காவி டிரெஸ் போட்டுருக்காரே அவர கேளூ....."

பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் "கீழ அமுக்குனா தானே சுக்கிலம் காபலத்துல ஏறி முக்தி கிடைக்கும்"

கடை கோடியிலிருந்து ஒரு குரல் "சரி சரி ரொம்ப வலிச்சதுன்னா சாமியாரு திந்நூறை காத்துலயிருந்து எடுத்துக் கொடுப்பாரு. அதுல பூசிக்கிட்டு கம்முன்னு கெட" என்றது.

Loading mentions Retweet

Comments [0]

♫கிராமத்து அத்தியாயம்♫-இளையராஜா

இரு பாடல்கள் கிராமத்து அத்தியாயம் படத்திலிருந்து...

ஊதக்காத்து வீசையிலே....

வாடாத ரோசாப்பூ....

Gramathu Athiyayam by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]