சிற்றின்பம்

அதையே யோசி 

♫அண்ணே! அண்ணே! சிப்பாய் அண்ணே!♫

செம ரகளையான பாட்டு. அந்த குரலை எப்படி மறக்கமுடியும்... வெகு இலகுவான ஆட்டம் பாடல் உங்களையும் துள்ள வைக்கும்.

♫அண்ணே! அண்ணே! சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்பொ ரொம்ப கெட்டுப்போச்சண்ணே!♫

இங்கே க்ளிக்கவும்

Loading mentions Retweet

Comments [0]

என்ன ஆகிறது மனிதனின் மனதுக்கு?

மைக்ரோவேவ் அவனில் வைத்து பிறந்த குழந்தை கொலை

பணம் கொடுக்க மறுத்த உறவினரின் குழந்தையை இரயில் தண்டவாளத்தில் துவைத்துக் கொலை செய்த மிருகம்

பணத்தை காணவில்லை என குடிகார தந்தை தன் சிறுபையனை சிக்ரெட்டால் சூடு போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சி

முதலீடு பிரச்சனையால் நெருக்கடி சந்தித்த தந்தை தன் மூன்று குழந்தைகளையும் மனைவி மாமியாரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை

இவையெல்லாம் குறைந்தது ஒரு மாதத்திற்குள்ளாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி. குழந்தைகளை கொல்லும் மனம் என்பது மனிதனுக்கு இருக்கவே இருக்காது என்பது என் திண்ணம். குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை மற்றும் கொலைகள் கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறதென தோன்றுகிறது. தனிமனித அமைதி என்பது இன்னும் கொஞ்ச காலத்தில் யாருக்குமே இல்லாம் போய்விடும் என்ற செய்தியையும் எங்கோ படித்த ஞாபகம். இதற்கு விடை தான் என்ன?

குறைந்தது பத்திரிக்கைகளாவது இதையெல்லாம் கேட்கும் திரணியற்ற மனித இனம் என்பது இன்னும் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு இந்த மாதிரி செய்திகளை வெளியிடாமல் கூட இருக்கலாம். இந்த செய்திகள் பலவீனமானவர்களை பாதிப்பதோடு மிருகங்களுக்கு தீனி போடுகிறது என்பதை பத்திரிக்கைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் இந்த மாதிரி செய்திகளை நான் படிக்கக் கூடாதென தள்ளி வைத்தாலும் தலைப்பு வலுக்கட்டாயமாக என்னை படிக்க வைத்து என்னை உளைச்சலுக்கு ஆளாக்குவது தான் மிச்சம்.

 


அண்மையில் பத்திரிக்கைகளில் படித்த சில செய்திகள்

Loading mentions Retweet

Comments [0]

'Hairy' பாட்டர்

என்ஜாய் 'Hairy'பாட்டர்


Loading mentions Retweet

Comments [0]

ஷகீலா மீதான கேஸூம் - என் கருத்தும்

Loading mentions Retweet

Comments [0]

தனம் - துணிச்சலான படம்

   
Click here to download:
_-.zip (347 KB)

Loading mentions Retweet

Comments [0]

♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫

♫எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே♫

சின்ன கண்ணம்மா படத்திலிருந்து இளையராஜா இசையமைக்க மனோ பாடியது.

Vazhaiyin Artham by Ilaiyaraja  
(download)

Loading mentions Retweet

Comments [0]

இங்கிலீஸ் காக்கா சீஸ் சுட்ட கதை

நம்ம தமிழ் காக்கா வடைய ஆட்டய போட்ட கதைய இங்கிலீஸ் காக்கா காப்பியடிச்சி சீஸ் சுட்ட கதையின் தமிழாக்கம்:

ஒரு அழகான பெண் காக்கா ஒன்னு (கவனிக்க படத்தில் காக்கா தலையில் ஸ்கார்ஃப் கட்டியிருந்தது) சீஸ் (Cheese) தூக்கிட்டு வந்திச்சான். மரத்துல குந்திக்கினு சாப்பிடலாம வேண்டாமான்னு பலமான ரோசனையில இருந்திச்சாம்.

அந்த வழியா ஒரு காட்டுப்பன்னி வந்திச்சாம். காட்டுப்பன்னி நெனைச்சிதாம் என்னோட கோணங்கி மூஞ்சை கோணங்கி சேட்டை பண்ணி காமிச்சா காக்கா சிரிக்குமா? சீஸ் கீழே விழுந்திருமா. நாம தூக்கிட்டு ஓடிரலாமுன்னு நினைச்சிதாம். காட்டுப்பன்னியும் பயங்கரமா மூஞ்சை காமிச்சி பன்னி Funny ஃபேஸ் காமிச்சிதாம். காக்கா உம்மண்ணா மூஞ்சின்னு பன்னிக்கு தெரியுமா? காக்கா சிரிக்கவேயில்லை. காட்டுப்பன்னியும் வெறுத்துப் போயி ஓடுடிச்சாம்.

அடுத்து அந்த வழியா ஒரு யானை வந்திச்சாம். யானை கறார் பேர்வழி. சொன்னா வேலைக்கு ஆகாதுன்னு தும்பிக்கையில உறிஞ்சி வச்சிருந்த தண்ணிய சொல்லி மிரட்டிச்சாம். சீஸை கீழே போடு, இல்லாங்காட்டி தண்ணிய உன்மேலே ஊதிருவேன் என்றதான். காக்கா தேமேன்னு குந்தியிருந்தச்சாம். யானை தும்பிக்கையில தண்ணியை காக்காவை நோக்கி பிசிறி அடிச்சதாம். காக்கா பறந்துப் போயிருச்சாம்.

திரும்ப காக்கா வந்து மரத்துல உட்கார்ந்திச்சா. அந்த வழியா கரடி வந்திச்சாம். கரடி சொல்லிச்சாம் காக்கா சீஸை கீழேப் போடு நான் சொம்பு நிறைய தேன் தாரேன். நக்கி சப்பிக்கிட்டே இருன்னுச்சாம். காக்கா மனசுக்குள்ளே சிரிச்சிச்சாம். லூஸூ கரடி நான் எப்படிடா தேனை நக்கி சப்பிடமுடியும்ன்னு மனசுக்குள்ளேயே சொல்லிகிடுச்சாம். கரடியும் போயிடிச்சாம்.

அப்புறம் அந்த வழியே ஒரு தந்திரக்கார நரி வந்திச்சாம். நரி சீஸை பாத்தி ஒன்னுமே சொல்லலையாம். காக்காவை பார்த்து ஏ! காக்கா நீ எவ்ளோ அழ்கா இருக்கே தெரியுமா.நான் காக்காவ இருந்திருந்தா உன்ன தான் கண்ணாலம் கட்டிக்கின்னு இருப்பேன்.ஒன் உடம்பை பார்த்தா எல்லாத்துக்கும் நட்டுக்குடும். நீயே இவ்ளோ அழகா இருந்தா உன் குரல் எப்படியிருக்கும். உன் குரலை திறந்து ஒரு அழ்கான பாட்டுப்பாடுன்னதாம்.

காக்கா நினைச்சதாம் சே! எவனுமே என்னை இவ்ளோ செக்ஸியா இருக்கேன்னு சொன்னதே இல்லை. என்னை இந்த படுபாவிப்பய இப்படி புகழ்றான் ரொம்ப நல்லவனா இருப்பான் போல. நானும் ஒரு பாட்டு பாடிற்றேன்னு சொல்லி காகா கா கா கா ந்னு கத்திச்சாம். சீஸ் கீழே விழுந்திச்சாம். நரி தூக்கிட்டு ஓடுடிச்சாம்.

-பையனோட கதை புத்தகத்தில் கிடைத்தது....(என்னோட கற்பனை டயலாக்கோட :-)

Loading mentions Retweet

Comments [0]

♫கண்விழி என்பது கட்டளையிட்டது♫

♫கண்விழி என்பது கட்டளையிட்டது கைவிரல் என்பது சிற்றிடை தொட்டது தொட்டது பட்டதும் நெஞ்சினில் சுட்டது வாழ்வே நீ தான் வா♫

  
(download)

Loading mentions Retweet

Comments [1]

சுயநல வாத்தியானுக

உ.பி: வகுப்பறையில் பூட்டி 200 குழந்தைகள் சித்ரவதை

 



இந்த செய்தியை படிச்சதும் ஏனோ என் மனம் பின்னோக்கி சென்று விட்டது. அன்று அந்த வாத்தியர் கன்னத்தில் விட்ட அறை இன்னும் மறக்கவில்லை.

பள்ளிப் பெயர்: தூயயோவான் மேல்நிலைப்பள்ளி
இடம் : பாளையங்கோட்டை
வகுப்பு: 9ம் வகுப்பு G பிரிவு
வருடம்: 1989
வாத்தியார் பெயர்; மறந்துப் போச்சு

மேட்டர் என்னவென்றால் எங்கள் வகுப்பில் PT வாத்தியானின் பையனும் உண்டு. அந்த வாத்தியான் பையன் பையிலிருந்த டப்பாவிலிருந்த அழி இரப்பரை சுட்டாங்களோ இல்லை அவனே வீட்டுல மறந்து வச்சி வந்தானோ தெரியால. திடீர்ன்னு அந்த பையனோட அப்பா உள்ள வந்தாருங்க. கையில கிடச்சவனையெல்லாம் அடிச்சாரு. கையில கிடைக்கதவனை சாக்பீஸை தூக்கியெறிஞ்சே மண்டைய உடைச்சாருங்க. ஆளு நல்ல கிண்டா மாதிரி இருப்பாரு.கையி நல்ல கர்லகட்டை மாதிரி வீங்கி போய் கெடக்கும். PT  வாத்தியர் வேறல்ல.

என் கன்னத்திலேயும் ஒன்னு விட்டாருங்க. இன்னும் வலிக்குதுங்க. இப்ப நினைச்சி பார்த்தா தான் சில வாத்தியாருங்க எவ்ளோ அராஜகமா இருந்திருக்காங்கன்னு தெரியுது.

இருந்தாலும் கடைசி வரை அழி இரப்பரை யாரு எடுத்தாங்கன்னு தெரியலைங்க. வாத்தியார் பையன் தான் ஏதோ விபரீதம் நடந்த மாதிரி ஞேன்னு முழிச்சிக்கிட்டு இருந்தான்.

 

Loading mentions Retweet

Comments [4]

Google's Grandcentral

ரொம்ப நாளைக்கு முன் பீட்டா சோதனைக்காக கூகுள் கொடுத்திருந்த grandcentral கணக்கு சும்மாவே கிடந்தது. அதை தூசி தட்டி பார்க்கலாமென சோதனை முயற்சிக்காக இங்கே. இது அமெரிக்கா/கனடாவில் இருக்கும் மக்காவுக்கு மட்டுமே வேலை செய்யும். சும்மா உங்க நம்பரை கொடுத்து க்ளிக்கி பாருங்க. மொதல்ல உங்களுக்கு ஒரு போன் வரும். எடுத்தால் அதை என்னோட இணைத்து விடும். பயப்படாதீங்க. வரும் அழைப்புகளை எல்லாம் வாய்ஸ்மெயிலுக்கு அனுப்புகிறேன்.

முடிஞ்சா நல்லவிதமா நாலு கெட்ட வார்த்தை சொல்லி திட்டி வாய்ஸ் மெயில் விடுங்க. மொதல்ல சின்ன சூப்பர் இளையராஜா பாட்டு வரும் அப்புறம் ஒரு பீப் வரும் அப்புறம் நீங்க பேசிட்டு(திட்டிட்டு) வச்சிடுங்க. முடிஞ்ச உங்க மறுமொழிகள் அங்கே

 

Loading mentions Retweet

Comments [0]